பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

23き5

'உங்ககிட்டே நான் ஏன் பேச வேணும்? என் மனச்சாட்சியை எதுக்கு நான் பேசவிடணும்? நீர் ஊருக்கு ஒசந்த மனிதராய் இருக்கலாம். ஆனல் என் வரையிலும் நீர் சாதாரண ஆள்தான்! அம்மன்கோயில் முதல் காளாஞ்சி விசயத்திலே நீர் என்னை ஆட்டிப் படைச்சு என்னைச் சீண்டிவிட்டு வேடிக்கை பாத்திரே, அந்த ஆத்திரத்துக்குப் பதில் சொல்ல வேண்டித்தான் நான் ஒரு தில்லுமுல்லு' செஞ்சு, உம்மைக் கச்சேரிப்படி வரைக்கும் இழுத்துப் போட்டு வேடிக்கை பார்த்தேன். இன்னம் வேடிக்கை காட்டவும் போறேனுக்கும்: அந்த வேடிக்கைக்குத் தூபம் காட்டத்தானே நீங்க எங்க வெள்ளக் காளையையும் கையாலாகாத்தன மாய் அழுச்சாட்டியம்' பண்ணிக் கட்டிப் போட்டு வச்சிருக்கீங்க?-சரி; இப்ப நீங்க களவாடி வச்சிருக்கிற என்ைேட ஒற்றை வைரச் சிமிக்கிக்கு ஆதாரம் கேட்கிறீங்க இல்லையா?...உம்மோட யுக்தி எனக்குப் புரியாமல் இல்லே! நான் உம்மை ஏய்ச்சு உபரியாய் இரண்டாயிரத்துக்கும் சேர்த்து பிராமிசரி நோட்டு பூரிச்சு வாங்கிக்கிட்டதுக்கு ஈடு கட்டி என்னை ஏய்க்கிறதுக்கு என்ைேட அந்த ஒரு வைரச் சிமிக்கியைப் பகடையாக்கி விளையாடப் பார்க்கிறீராக்கும்? நஷ்டத்தை ஈடுகட்ட லாபம் சேர்க்க ஆசைப்படுறிராக்கும்??

இவ்வாறு ராமையாத் தேவர் கவடு தொனிக்கப் பேசி முடித்து, கண் இமைப் பொழுதிற்கு தன் அத்தான் ஆதிமூலத்தை ஒரக் கண் பதித்துப் பார்வையிட்டார். அடுத்த இமைப்பில், சற்றே பின்