பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

32

வீட்டின் ஞாபகம் அவனுள் நிழலாடத் தொடங்கியதும், தந்தையின் ஞாபகம் அவனை ஆட்டிப் படைத்தது. வீட்டில் அப்பா ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்; திட்டங்களே வரை பறுத்துச் செயற்படுத்த வேண்டும்!-நடந்தான். கையில் விரிந்த ஏடும் நடந்தது. உடன் பிறப்பே' என்ற பாசத்தின் விளிப்புச் சொல் அவனே ஆனந்தக் கடலாடச் செய்தது. பாசம் ஆயிற்றே அது:

மடக்கத்தில், லேவாதேவி நல்ல தம்பிச் செட்டி யார் எதிர்ப்பட்டார். 'தம்பி, உங்க அப்பா உங்களுக்காக மகமாயி கோயில் பஸ் நிறுத்தத்திலே கூட்டுவண்டியோடே காத்துக்கிட்டுஇருக்காகளே!" என்று வீரமணியிடம் விவரம் தெரிவித்தார்.

"சரிங்க, ஐயா!'

வீரமணிக்கு வியப்பும் அதிர்ச்சியும் உண்டா வின. தள்ளாத காலத்திலே அப்பா ஏன் வண்டியை ஒட்டிக்கிட்டு வந்திருக்காங்க வண்டிக்கார நாச்சி எங்கிட்டுப் பறிஞ்சிட்டாளும்? அது சரி; ஒடுற பாம்பை மிதிக்கிற இந்த விடலைக்குப் பாதை புரிந்து, பாதை பார்த்து நடந்து வீடு வந்து சேரத் தெரி யாதா, என்ன? உணர்வுகள் குறுகுறுத்தன நட்பின் அணியை நோக்கினன். "நீங்க ஆந்திக்கு எங்க வீட்டுப் பக்கம் வாங்க. நிறையப் பேச வேண்டி யிருக்குது," என்று கூறிவிட்டு விடைபெற்ருன்.

நிழல் நீண்டது.

பாசம் பூவிலங்காக மணத்து அழுத்த, கால்களே எட்டிப் போட்டான் வீரமணி: