பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

23 8

முயன்ற அவசரத்தின் விளைவாக, மண்ணிலேகட்டாந்தரைப் புழுதி மண் வெளியிலே தொபு கடீர் என்று சாய நேர்ந்தது. அதன் விளைவாக, பெரியவர் ஆதிமூலத்துக்கு நெஞ்சடைப்பு வந்து விட்டது. அது மட்டுமல்ல! -அவருடைய நெற்றிப் பொட்டினின்றும் ரத்தம் பீறிட ஆரம்பித்தது.

'அப்பா!' என்று வீரிட்டான் வீரமணி. 'மாமா!' என்று விம்மினுள் அன்னக்கொடி.

"அத்தான், மாமாவுக்கு மூச்சு இருக்குங்களா?” என்று தழுதழுத்த குரலிலே வினவியவளாக, அருமை அத்தானை ஒட்டிக் குந்தினுள் அன்னம்.

"ஒண்ணும் ம ட் டு ப் பட மாட்டேங்குது, புள்ளே!” ரத்தத்தைத் துடைத்தபடி சொன்னன் வீரமணி.

۶

"ஐயையோ!'

பாவம், ராமையா விழித்தார். சந்தடி சாக்கில் தப்பின மட்டும் ஆதாயமென்று எண்ணி, பையப் பைய நழுவ வேளை பார்த்திருந்தார்; தப்பி விடவும் முனைந்தார்.

வீரமணி கச்சம் கட்டியபடி கோபாவேசமாக எழுந்தான். 'அம்மான்! என்ைேட அப்பாவை உயிர்க் கழுவிலே தவிக்க வச்சுப்பிட்டு எங்கிட்டுக் கால் மாறப் பார்க்கிறீங்க? போனதும் வந்ததுமாய் ஒட்டமாய் ஒடிப்போய், நம்ப நாட்டு வைத்தியர் சோம சுந்தர ஐயாவைக் கையோட இட்டுக்கிட்டு