பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

2 33

ஒடியாங்க!” என்று ஆணையிட்டான். அவனது வேட்டியின் முனையில் ரத்தம் சொட்டியது.

'அப்படியே செய்கிறேனுங்க, மாப்பிள்ளை'

பெட்டிப் பாம்பாகவோ, அல்லது மகுடிக்குக் க ட் டு ப் ப ட் ட பாம்பாகவோ மாறிவிட்டார்.

ராமையா.

இரண்டாந் தடவையாகப் புதுப்பிறவி கொண் டார் ஊர் நாட்டாண்மை ஆதிமூலத் தேவர். கண்களை மருள மருள விழித்தவண்ணம் சுற்று முற்றும் பார்வையைப் பரப்பினர். ராமையாவைக் கண்டவுடன், அவரது கண் வளையங்களைக் குரோத மனப்பான்மை வளைத்துக் கொண்டது. பற்களைக் கடித்துக் கொண்டார். எதையோ நினைவுபடுத்திக் கொண்டவர் போன்று ஒர் அரைக்கணம் திகைப் படைந்தார். அவசரம் அவசரமாக, படுத்த நிலை யிலேயே தன் அடிமடியைத் தடவி பார்த்தார். இரண்டு சிமிக்கிகளும் பத்திரமாக இருப்பதைக் கண்டு கொண்டவுடன், ஆறுதலோடு நெடுமூச் செறிந்தார்.

"நான் விடை வாங்கிக்கிடட்டுமா, மாப் பிள்ளை?’ என்று விடை கேட்டார் ராமையா.

'ஏய் ராமையா! என் அருமை மகனை மாப் பிள்ளைச் சொந்தம் கொண்டாடிக் கைக்குள்ளே போட்டுகிட கனவிலேகூட நினைக்காதே! நான் சொன்னதை மறந்துப்பிட்டா, மறுதக்கமும் "வீர மணி மாப்பிள்ளை'ன்னு அழைச்சு அவன் கிட்டே விடை கேட்கிறே?- உனக்கு எம்புட்டு