பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

3.

5

蕊á

“சரி; சோறு உண்ணலாம் வா, ஆத்தா!"

"ஓ! * . அடுப்படிப் பக்கம் காலடி எடுத்து வைத்தான் ராமையாத்தேவர். -

இருட்டு கனமாயிற்று. அப்போது, வெள்ளைக் காளை பரிதாபமாகக் கதறும் சத்தம், சோத்தின் அலைகளை எழுப்பியவாறு காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது.

இச்சத்தத்தைக் கேட்டது தான் தாமதம்: உடனே சிங்கப்பூர்ச் சீமானின் கொட்டி அளந்த சிரிப்பெல்லாம் கொட்டித் துாற்றிய சாவி யாக அதற்குள் எந்தக் கடவுக்கு எப்படித்தான் ஆலாய்ப் பறந்து தொலைத்ததோ? வயிற்றில் அடித்தவனை நெஞ்சைக் கணித்து அடித்து வீழ்த்திக் கருவறுக்கத் கடித்த துடிப்பு அவரது கண் வளையங்களிலே வினையென விளையாடியது. ஏதோவொரு பயங்கர முடிவுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்ட வராக, பற்களைக் கடித்துத் கொண்டார் அவர்.

மறுபடி வெள்ளையின் காட்டுக் கூச்சல் ஒடி வந்தது,

"பாவம், வாயில்லாச் சீவன் பசி தாளாமல் கத்திக் கதறிக்கினே இருக்குதுங்களே, அப்பா? நம்ப வீட்டுக் கொட்டடியிலே நின்னிருந்தா, இம் மாம் பொழுதுக்கு எத்தனையோ வாட்டி தீனி அள்ளிப்போட்டு இருக்க மாட்டேனுங்களா, அப்பா? நம்ப உடைமையை இப்படித் தோற்றுப்பிட்டு சிவ னேன்னு நிற்பீங்களாக்கும்?"