பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253

253

ஆவணத்தாங்கோட்டைக்கே உயர்ந்த புள்ளியாக உயர்ந்து வர முயன்று கொண்டிருக்கும் ராமையா வின் வெள்ளை அது! எப்படியோ அது ஆதிமூலத் தேவரின் மாட்டுத் தொழுவத்தை முறி வைத்து விட்டு ஓடிவந்து விட்டது.

'அப்பா,’’ என்று அலட்டினுள் தேவரின் பெண்.

பருத்தி, புடவையாகவே காய்த்துவிட்ட குதுகலத்தைக் காளே அவர் வசம் ஒப்படைத்து விட்டிருக்க வேண்டும்!-பண்ணைக்காரன் சொன்ன இடுசாமச் சேதியை அப்போதைக்கு மறந்து போனர்.

"உன்னுேட அயித்தை புருசன் மானத்தைப் பொழுது விடிஞ்சதும் கப்பலேற்றிப்பிட வேணும்னு ரோசிச்சுக்கிட்டு இருந்தேன். பல்லுப்போன அந்தக் கிழம் இப்போதைக்கு என் கிட்டேயிருந்து படிக்குப் பாதி தப்பிச்சுக்கிடுச்சு. நம்மோட வெள்ளை எப்படியோ ராவோடு ராவாக விடுதலை அடைஞ்சி வந்திருச்சு! ஆன. ஊர் நாட்டாண்மைப் புள்ளி என் கையிலேயிருந்து ஒட்டு மொத்தமாய் விடுதலை அடைய வேணும்னு,நம்மோட அந்த வைரச்சிமிக்கி கள் ரெண்டுக்கும் அவர் பதில் சொல்லியாக வேணும்!” என்ருர் ராமையா.

அன்னக்கொடி நெடுமூச்செறிந்தாள். 'நம்ப வெள்ளை தன்னுலே மச்சான் வீட்டிலேருந்து விடுதலை வாங்கிக்கிட்டு ஓடிவந்திருக்கும்னு நினைக்கிறீங்களா, அப்பா?’ என்று விசாரித்தாள் கன்னிப்பெண்.