பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255

,盛器莎

அப்பாவின் பரிதாபத்திற்கு உகந்த இந்தக் காட்சியைக் கண்ட அன்னத்திற்கு அனுதாபம் மேலிட்டது. 'சரி, சரி, கை கழுவிப்புட்டு வாங்க, சாப்பிடலாம்!” என்ருள்.

"நல்லாய்ச் சொன்னுய், ஆத்தா. இதோ, கை கழுவிப்புட்டு நொடியிலே வந்திடுறேன். நீ உள்ளே போய்க் கதவை நாதாங்கி போட்டுக்கிட்டு இரு, அன்னம்' என்று கூறிவிட்டு, அரிக்கன் விளக்கைத் தூண்டியவாறு கையிலெடுத்தார் ராமையா. சற்று முன்னம் பண்ணைக்காரன் சொன்ன அந்தப் பயங் கரச் சேதியை அவரால் மறக்கவே முடியாது!

'பசியாருமல் ராத்திரியிலே எங்கிட்டும். பறியிறீங்க, அப்பா?” -

"அன்னம், நான் உன்னை விட்டுப்புட்டு எங்கிட்டும் மறுகவோ மடங்கவோ ஏலாது. அதனலேதான், நான் என்ளுேட விதியை நானே தேடிக்கிட்டுப் பறிகிறேன்; நான் விதைச்ச வினையை நானே, என் கையாலேயே அறுவடை பண்ணிக். கண்டுமுதல் பண்ணிப்புடப் ப றி யிறே ன். புதிராட்டம் என் பேச்சு உனக்குத் தோணுதா! மெய்தான். புதிர்தான் போடுறேன்...! இந்த நாலைஞ்சு வருசமாய் உன்கிட்டேயிருந்து கமுக்கமாய் மறைஞ்சு நின்னு புதிர்போட்டுக் கிட்டு வந்த நான், இனி நான் போட்ட புதிரை நானே விடுவிக்க வேண்டிய வேளே வந்தாச்சு. நீ சாப்பிட்டுப்புட்டு, கெட்டியமாய்த் தூங்கு நான் திரும்பினால் கதவைத். தட்டுறேன்! நான் வாரேன்!” என்று கூறி, குரலின்