பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

多5?

செங்கமலத்துக்குக் காவல் இருக்குப் போயிட்டார் அப்பா!' -

நினைவுகள் சீறின: ஆறின:

வெள்ளைக்கு இப்போது என்ன கேடு வந்து தொலைத்தது? வாய்பேசாமல், சிவனே என்று தன் விதியைத் தொழுத வண்ணம் தொழுவத்தில் பசு வாக அடைந்து கிடக்கக் கூடாதோ?-பிடுங்கிப் போட்ட கூளம் அதற்குள்ளாகவா தீர்ந்து விட்டது!- சே!... ஆலுைம், இவ்வளவு குறும்பு கூடாது! அத்தை வீட்டிலே தீனி இல்லாமல் பூராப் பொழுதுக்கும் கொட்டடியிலே கொட்டக் கொட்டப் பட்டினி கிடந்தது மறந்து போய்விட்டது. போலும்!

நடராசர் கோயில் பக்கம் நாய் குரைக்கிறது:

வெள்ளைக் காளையின் மூலம் தன் குடும்பத், துக்கும் அத்தையின் குடும்பத்துக்கும் இடையில் நிலவியிருந்த பகைமை காளாகை வளர்ந்துவிட்டி ருக்கும் நிலவரத்தை, எண்ண எண்ண, அன்னக் கொடிக்கு வெள்ளே மேலிருந்த அனுதாபம் ஆத்திர மாக உருமாறி, உருக் கொள்ளத் தொடங்கி விட்டது. கொடுக்கல் வாங்கல் விவகாரத்தின் காரணமாக அப்பாவுக்கும் மாமாவுக்கும் நடுவில் வந்த கோபதாடங்களைக் கிண்டிக்கிளறி வேடிக்கை பார்க்கத்தான் வெள்ளை, அத்தை வீட்டின் வைக் கோலைக்கேள்வி முறையில்லாமல் தின்று வைத்ததா? வெள்ளை மீது மட்டிலும் குற்றப்பத்திரிகை வாசிப்பது மனிதத்தன்மை ஆகாது. அந்த வைரம்.