பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

264

'நான?...வந்து......வந்து..... 'அதுதான் வந்திட்டீங்களே? விவரத்தைச் சொல்லுங்க. நீங்க ஏன் இங்கே வந்தீங்க?"

"நான் எங்க வீட்டோட மானத்தையும் கவுரத் தையும் மீட்டுக்கிட வந்தேன்!”

'ஒகோ!...அப்படிங்களா? நானும் எங்க குலக் கவுரவத்தையும் குடும்ப மானத்தையும் மீட்டுக் கிடத்தான் இப்படிப்பட்ட இருட்டிலே இந்தக் காட்டுக்கு வந்தேனுங்க, மச்சான்!”

அப்படியா சங்கதி?’’

“பின்னே? உங்க வீட்டு வைக்கோலை அறியாமல் தெரியாமல் துளியூண்டு தின்னு தொலைச்ச பழி பாவத்துக்காக, வாயில்லாச் சீவனை உங்க அப்பா கொட்டடியிலே கட்டிப் போட்டாங்க, இல்லைங் களா? அந்த வெள்ளைக்காளை ராவுக்கு ராவாய் விடுதலையாகி எங்க வீட்டுக்கு ஒடியாந்திச்சு. வந்த காளையை யாரோ முடிச்சு மாறிப் போகுடி ஆசாமி கொஞ்ச முந்தி பிடிச்சிக்கிட்டு ஓடிட்டான். அந்தப் பொம்பளை செட்டி'யைத் துரத்திக்கிட்டு நான் வந்தேளுக்கும்!”

சிரிப்பொன்று சஞ்சலத்தோடு வி ம் மி ப் புடைத்து வீரிட்டு வெடித்தது!

"மச்சான், ஏன் சிரிக்கிறீங்க?"

‘'சிரிக்கப்படாதின்ன, அழட்டுமா, அம்மான் பொண்னே?"