பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265

265

விளையாடு lங்களே? ` 'நானு விளையாடுகிறேன்? ஊகூம்! விதி விளை பாடுது!’

'ஒண்ணுமே மட்டுப்பட மாட்டேங்குதே, அத்தானே?”

'அன்னம், உங்க வீட்டுக் காளை தன்னுலே விடுதலையாகி உங்க வீட்டை நாடி ஒடி வரல்லே! நானேதான் அதை நேற்று அவிழ்த்து விட்டேன்! ஆன, இந்தச் சங்கதியைத் தெரிஞ்சுக்கிட்ட என் அப்பன்காரர் உடனே உண்ணுவிரதம் இருக்க ஆரம்பிச்சிட்டார். நான் அவரோட அனுமதி இல்லாமல், தன்னடைச்ச மூப்பாய் அவிழ்த்து விட்ட உங்க வெள்ளையை நானே திரும்பவும் சிறைப் புடிச்சுப்பிட வேணும்னு ஆணே இட்டாங்க. அப்பன்காரரோடி வம்பும் வீம்பும்தான் ஊரறிஞ்ச தவசலாச்சே? அவரோட சொந்தத் திட்டத்துக்கு விரோதமாய், நான் உன்னையே கட்டிக்கிடப் போறேன்னு அன்றைக்கு வாக்கு கொடுத்திட்ட சடனையை மனசிலே தாங்கிக்க முடியாமல், பட்டினி கிடக்காங்க. பெற்ற அப்பன் பாவம் சும்மா விடுமா?... நானேதான் கமுக்கமாய் நலியாமல் ஓடி வந்து உங்க வீட்டு வெள்ளையைக் கடத்தி இழுத்துக் கிட்டு ஒடினேன். ஆமா அன்னம்!” -

'மச்சான், இப்ப எங்கே அந்தக் காளை?” 'ஏன்? அங்கிட்டு சவுக்கு மரத்திலே முடி போட்டுக் கட்டியிருக்கேன் உங்க வீட்டுக் காளையை!”