பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

2 6 {$

"அதை எங்கிட்டே ஒப்படைச்சுப்பிடுங்க! ஏன், தெரியுங்களா? நான் என் அப்பாருக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவளாக்கும்!”

'ஊகூம்! முடியாது! என் அப்பாருக்கு நான் பதில் சொல்லியாக வேணும்! நான் உங்க காளையை என் அப்பா கையிலேதான் ஒப்படைப்பேளுக்கும்!”

'மெய்யாலுமா?’’

"ஆமா!’

“urrffé#35@frLDIr?’’

“பார்க்கிறதுக்கு இருட்டு தடை போட்டிருக் குதே, அம்மான் செல்லமே! '

'உங்களைப் படிச்சுக்கிட முடியல்லீங்களே, அத்தானே!”

'ப்பூ!...இம்புட்டுத்தான? என்னைப் படிச்சிக் கிட திராணி இல்லாத உங்கிட்டேயா என்னை ஒப் படைக்கச் சொல்லுறே?’’

"மச்சான்!” என்று கோபக் கனல் தெறிக்க அலறியபடி, காளையைத் தடம் கண்டு தேட ஒடி ளுள் அன்னம்.

மறுபடியும் அவள் கையைப் பிடித்து இழுத்து மடக்கினன் வீரமணி. பூங்கரத்தின் தொட்டுணர்வு அவன் இதயத்தின் மனச்சான்றைத் தொட்டு உணர்த்தியிருக்கலாம்! r

ஆடி மாத மேகப் படுதாவில் மின்னல் ஒன்று வெட்டிக் கீறியது.