பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269

269

பார்வையை. அந்தப் பார்வை என்னவோ ஒரு மாதிரியாக இருந்தது. அதில் யதார்த்தமான பாசம் இல்லை; போலித்தனமானதும் ஊமைத் தன மானதுமான ஒரு செயற்கைத் தன்மையைத் தான் அவள் பார்வையில் அன்னம் காண முடிந்தது. வர வழைத்துக் கொண்ட பூஞ்சிரிப்புடன், மூஞ்சி நெஞ்சிலே நிற்குது; ஆன, உம் பேர் தான் நினைப் பிலே நிற்கல்லே!' என்று தெரிவித்தாள் சிங்கப்பூர் ராமையாவின் அருமை மகள்.

'நல்லாய்ச் சொன்னே, போ! நான் உன் பேரை முத்திரை குத்தினது கணக்கிலே இம்மாம் காலத்துக்கு ஞாபகம் வச்சுக்கிட்டிருக்கேன். நீயா ல்ை, பழசுபட்டதை அடியோடு மறந்தாப்பிலே, எம் பேரையுமில்லே மறந்து போயிருக்கே?'

பவளக்கொடியின் பேச்சு அன்னத்திற்குச் சிரிப்பை ஊட்டி விட்டது. முத்துச் சுடர் ஒளிர, ஒர்மையோடும் தன்மையோடும் சிரித்தாள் அவள். பிறகு, ‘கதைன்ன, அதிசயமாய்த் தான் இருக்கும்; இருக்கவும் வேணும். கதையின்ன, அதுதானே அருத்தம்? பார்க்கப் போனுல், வாழ்க்கை கூட கதையேதான்! நீ செப்பின தொப்ப, என் கதை கூட ரொம்ப அதிசயமானதுதான், தங்கச்சி!” என்று பேசினுள்.

'அன்னம், உன்னை மாதிரியே உம் பேச்சும். அழகாய் இருக்கு!”

'பொய் பேசவியே நீ?" 'பொய்யே பேசத் தெரியாது!”