பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

27 G

'பொய்யே பேசத் தெரியாது என்கிறதே பொய்! நான் நம்புறதுக்குத் தயாராக இல்லே. ஆளு, பொய் பேசப் படாது அப்படின்னு சொல்லு, த் ம்புறேன் .”

“அந்தச் சங்கதி இப்பைக்கு ஈசான்ய முடுக்கிலே ஒடுங்கட்டும். மெய்யாலுமே நீ ஒசத்தியான அழகு கொண்ட பொண்ணுதான்! அதாலேதான் உன்னை என்னலே இம்புட்டு வருசத்துக்கு மறக்கவே முடியல்லே, அன்னம்!”

‘ஓ! அப்படீன்ன, அம்புட்டுத் தொலைவுக்கு என் அழகு உன்னை மயக்கிடுச்சின்னு சொல்லு!”

'ஊம்.! உன் அழகு என்னை மட்டுந்தான மயக்கும்?”

"அப்பன்ன, உன் வாய்க்குச் சர்க்கரைதான் போட வேணும்!”

'வெறும் சர்க்கரை மட்டிலும் தான் என் வாய்க்கப் போடப் போlயா. அன்னம்?”

s

தேடி வந்த விருந்தாளி வேறு என்ன எதிர் பார்க்கிருளென்று அன்னத்திற்கு விளங்கிடவில்லை. அப்போது, மூக்கின் முனையில் முன் கோபத்தைக் கூடுகட்டி வைத்திருக்கும் முசுடு மாதிரி, அடுப்பில் உலே கொதித்துக் கொண்டிருந்த ஓசை கேட்டது. “வாய்க்குச் சர்க்கரையும் போடுறேன்; வயிற்றுக்குச் சோறும் போடுறேன், தங்கச்சி!' என்று டக்' என்று ஒரு போடு போட்டாளே, பார்க்க வேண்டும்!