பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

273

பவளம் இங்கே ஏன் வந்திருக்கிருள்? அவள் பார்வை நன்ருக இல்லையே? வைரப் புளியங் கொம் பாகப் பார்த்துத்தான் அத்தானைக் கட்டிப்போட நினைத்திருக்கிருர் மாமா! பாவம், அத்தை புருஷன் ஏமாந்து விட்டாரே?

அலைகள் ஒய்வதில்லை!

அன்னக்கொடி அவளுக்கே உரித்தான பரி வுடன் பவளக்கொடியை-சிலட்டுர்க் கங்காணி யாரின் அருமந்தப் புதல்வி பவளக்கொடியை நெருங்கி, பவளம், வா, சோறு உண்ணலாம்”, என்று அன்புடன் அழைத்தாள். மனிதாபிமானம் மணந்திட அழைத்தாள்.

‘ஏலே அன்னம்: ஈனத்தனமும் சின்னத்தனமும்

கொண்ட உங்க வீட்டிலே கை நனைக்க வந்திருக் கேன்னு மனப்பால் குடிச்சே நீ? என்ளுேட தாலிப் பிரச்னை சம்மந்தப்பட்ட ஒரு சங்கதியைப் பாளை வெடிச்சாப்பிலே உங்கிட்ட ஒதிப்புட்டு ஒடத்தான் ஒடியாந்திருக்கேன்! கேட்டுக்க!' என்று மறைவுக் கவர்ச்சி விளையாடச் சற்றே நிறுத்தினுள் பவளம்.

அன்னத்தின் சந்திர பிம்ப வதனத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தலைப்பட்டன. -

உச்சாடனம் கொண்ட சூன்யக்காரியாகப் பவளம் தொடர்ந்தாள்:

'ஏ, அன்னம்! உன்னைக் க ண் ணு ல ம் பண்ணிக்கப் போறதாக உன் ஆசை அத்தை மகன் வீரமணி வாக்குக் கொடுத்திருக்காராமே? அந்தப்.