பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

276

மூலம், உன்னேட பேரிலேயே நீயேபழிசுமத்திக்கிட நேரிட்டி இடுசாமச் சங்கதி நாளைக்கு நம்ம மறக் குலச் சமுதாயத்திலே காட்டுத் தீயாகப் பரவத் தொடங்கினல், கன்னிப் பொண்ணுன உன் கதி என்னகும்னு ரோசிச்சுப் பார்க்கக் கூடவா உனக்கு மதிகெட்டுப் போச்சு?’

அன்னம் வீறு கொண்டு முழங்கினுள்:

தடம்புரண்டு நழுவியோட முனைந்தாள் பவளக்கொடி. -

சீமைக் கொய்யாப் பழத்தைக் கள்ளத்தன மாகக் கடித்துத் தின்றுவிட்டு நழுவி ஓடிவிட முயலும் எலியைத் துரத்திப் பிடித்துக் கைக்கு மெய்யாகத் தண்டனை கொடுக்க முனைவது மாதிரி, பவளக்கொடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண் டாள் அன்னக்கொடி!

'ஏ, பவளம்.! உன்னைப்போய் தங்கச்சின்னு விளிச்சேனே?-நான் ஒரு பைத்தியக்காரி! ஆன, பலே கைகாரி! அது மட்டுமல்ல; நீ படு சூதுக்காரி! அதாலேதான், யானை தன் தலை மேலே மண்ணை வாரிக் கொட்டிக்கிடுறதொப்ப, நீயே உன் பேரிலே வினையைத் துாவி விதைச்சுப்பிட துணிஞ்சிருக்கே! சே! நீயும் ஒரு பொம்பளையா? தமிழ்ச் சாதியோட நல்ல பேரைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பு நீ! சீ!...எச்சிற் கலைக்கு அலைகிற வெறிநாயே!”

சிம்மக்குரல் வீசி முழங்கி விட்டு, எச்சிலைக் காறிப் பவளத்தின் மீது துப்பிவிட்டாள் அன்னம்.