பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277

277

கைந்நொடிப் பொழுதிற்குள் :

பவளக்கொடி காட்டேரியாக மாறினுள். அன்னத்தின் பேரில் அவளும் பதிலுக்குப் பதில் எச்சிலை உமிழ்ந்தாள். அத்துடன் விடவில்லை, கங்காணி மகள். அன்னத்தின் குழற் கற்றையை மடக்கிப் பிடித்துக் கொண்டாள்.

'ஈயத்தைப் பார்த்து இளிச்சுதாம் பித்தளை! நானடி கெட்டழிஞ்சவ? நீதான் கெட்டழிஞ்ச லம்பாடிச் சிறுக்கி: உன் சிங்கப்பூர் அப்பன் செங் கமலத்தோட கொசுவத்தைச் சுற்றிக்கிட்டு இருந் திட்டு, இப்ப ஏமாந்து நிற்கலியா? அந்தப் புத்தி தானே உனக்கும் இருக்கும்? நான் ராமருக்கு வாய்ச் சிட்ட சீதை கணக்காக்கும்! எனக்கு அந்த வீரமணி நம்பிக்கைத் துரோகம் செஞ்சு, என்னை மோசம் செய்யத் துணிஞ்சால், அப்பவே அந்த வீரமணியை நாசமாக்கிப்பிட மாட்டேன?’ என்று உறுமினுள் பவளம்.

'ஆ' என்று கூக்குரல் பரப்பிப் பவளத்திட மிருந்து விடுதலை பெற்று விட்டாள் அபலை அன்னம். "அப்படின்ளு, பவளம் செப்புறதெல்லாம் மெய்யே தான?-மெய் நடுங்கியது. புயலிடை அகப்பட்ட அகல் விளக்கானுள். கொழுந்து விட்டெரிந்த மனத்திரி, ஏன் இப்படி அலமந்து துடிக்கிறது? பவளம் கடைசிவரை அவள் பிடியில் கிடைத்தால் தானே? அவள் ஆத்திரத்துடன் தவித்தாள்; வேதனையோடு துடித்தாள், அச்சத்தோடு துவண் டாள். கண்ணிர் மடைமாறிய வெள்ளமாக

கா, நி.-18 -