பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

龙份

தேறின தகவல் முன்னுடியே தெரியாது: ஆளு, நீ கட்டாயம் தேறிவிடுவாய் என்கிற துப்பு எனக்கு முன்னதாகவே புரிஞ்சிடுச்சு. நான் பெற்ற மகன் என்னுேட நம்பிக்கையைக் கட்டிக் காக்கத் தவறிப்பிடுவான, என்ன?”

அமைதி கனிந்திடப் புன்னகை செய்தான் வீரமணி: அப்பாவுக்கு என் பேரிலேதான் எவ்வளவு நம்பிக்கை!'-இவ்வாறு எண்ணிப் பெருமைப்பட்ட போது, இத்தகைய நினைவின் இன்பமும், இன்ப்த் தில் வழிந்த அமைதியுமே அவனுக்கு உயிராகவும் உயிர்ப்பாகவும் இயங்கிய அந்தரங்கத்தை அவன் உணராமல் இல்லை. வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு, பட்டுத் துப்பட்டாவை உருமாலையாகக் கொய்து கழுத்தைச் சுற்றிப் போட்ட வண்ணம் தார்க்குச்சியும் கையுமாக மாட்டைப் பூட்டிக் கொண்டிருந்த் தன் அன்புத் தந்தையைக் கண்ட தும், வீரமணியும் புறப்படத் தயாரானன். குறுக்கு மறித்த ஒற்றையடிப் பாதையில் ஒதுங்கி நின்ற சீமைக் கொன்றைத் தூரடியை நாடி மீண்டான்: தோற்பையைக் கட்கத்திடையே இடுக்கிக் கொண் டான். மற்றச் சமாச்சாரங்களைப் பற்றியெல்லாம் வீட்டுக்கு போன கையோடுதான் அப்பாவுடன் ஆற அமரப் பேசியாக வேண்டும் என்றும் முடிவு கட்டினன் அவன். :

வீரமணி!’’

“gihufr!”

"கிளம்பலாமா?"