பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279

279

ளுகி, வள்ளிசாய் நாள் முப்பத்தஞ்சு ஆகிடுச்சு: ஆமா!' என்ருள்.

பவளம் பெண்தாளு?- அவளைக் கடித்துக் குதறிப்போட்டால் என்ன?-அன்னத்தின் கைகள் மறுபடி குறுகுறுக்கத் தொடங்கின. இவளே மாதிரி மான ரோசம், சூடு சுரனை இல்லாத ஈனச்சென்டி மாக என் அன்பு மச்சான் வீரமணியையும் ஆக்கிப் போட கங்கணம் கட்டித்தான் கூத்து ஆடுருள் போலே!-கூத்தடிக்கிருள் போலே இந்தப்பாவி!பற்கள் கடிபட்டன. பவளத்தை விசையாக நெருங் கினுள் அன்னம்.

"அசலுார்க் குட்டியாச்சே நீ, அப்படின்னு: உன்னைச் சமிச்சு உனக்கு மாப்பு விட்டிருக்கிறேன். இல்லாங்காட்டி, முந்தியே உன்னைக் கடிச்சுக் குதறி வீசியிருப்பேன்! என் ஆசைமச்சான் பாதை தவறிப் போற ஆம்பளையே இல்லை. அந்த நம்பிக்கை இத்த வினுடி வரை எனக்கு உண்டு. ஆணு, நீயாக மோடி பண்ணி என் மச்சானே எங்கிட்டேயிருந்து அபகரிச் சுக்கிட உனக்கு வயசு பற்ருது எதுவுமே என் மச்சான் வீரமணியோட தீர்ப்புப் படித்தான் நடக்கும்!” -

அன்னம் தீயாகிச் சீறினுள்,

பவளக்கொடி துளிகூட அதிர்ச்சியடையாமல், தன்னுடைய பயங்கரச் சிரிப்பைத் தொடர்ந்து வெடித்தாள்.

'ஏலே, பவளம்! நான் கேட்கப்போற சங்கதிக் கெல்லாம் பதில் சொல்லு, பார்க்கலாம்!”