பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

28 (3

  • ஊ:ம்

"நீயும் வீரமணியும் கூடிக் களிச்சிங்க என்கிற துக்குச் சாட்சி என்ன வச்சிருக்கே? சொல்லுடி, பவளம், சொல்லு!'

எங்க சிலட்டுர் மாரி மகமாயி சத்தியமாகச் சாட்சி வச்சிருக்கேன்!”

“ஒகோ! அப்படியா? அப்படீன்ன, இப்பவே என் பின்னடி ஒடிவா. இப்பவே தமுக்கடிச்சு, எங்க ஆவணத்தாங் கோட்டைக் காளி மகமாயி சந்நதித் திட்டிலே ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டுறேன். இப்பவே எனக்கு எது நிசம், எது பொய், யார் அசல், யார் போலி என்கிற உண்மையும் தர்மமும் சத்தியமும் விளங்கியாக வேணும்!...ம்...வாடி பவளம்!' 3.

அழைத்துக் கொண்டே பவளக்கொடியின் கரங்களைப் பற்றி, மாட்டை இழுப்பது போன்று பர பர வென்று இழுக்கலானுள் அன்னக்கொடி.

ஆனல், பவளமோ திமிறிக்கொண்டு பின்னுக்கு இழுத்தாள். அன்னத்தின் பிடியை விட்டு விலகிக் கொண்டாள். "அன்னம், நான் கன்னிகழியறத் துக்கு முந்தியே கெட்டுப் போனவள் என்கிற ரகசியத்தை ஊரைக் கூட்டித் தமுக்குக் கொட்ட நினைக்கிறே நீ. நான் வாரேன்! ஆன, அதே ஊர்ப் பஞ்சாயத்திலே, உன் ஆசை மச்சான் வீரமணி யாலே நான் கெடுக்கப்படல்லே என்கிறதையும் நிரூபிச்சுக் காட்ட வேணுமாக்கும். ஆமா.