பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281

38 :

சொல்லிப்புட்டேன்!” என்று ஓங்காரமிடலாளுள் பவளக்கொடி. வெயிலில் மூக்குத்தி பளபளத்தது.

இப்பேச்சைக் கேட்டதும், அப்படியே வாய டைத்துப் போய்விட்டாள் அன்னம். மறு பேச்சாட வில்லை அவள் பவளக்கொடியின் அறைபடாத இன்னொரு கன்னத்திலும் இப்போது ஓங்கி ஓர் அறை கொடுத்தாள் அன்னக்கொடி. பத்ரகாளி யாக உருக்கொண்டு விட்டாளா அன்னம்? 'அடி, பாவி! உனக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சா?-- ஒலமிட்டாள்.

அப்போ து :

'அன்னம்!” என்று விளித்த வண்னம், அன்னத்திற்கு உடைமை பூண்ட வெள்ளைக் காளை உம் கையுமாக அங்கே தோன்றினுன் வீரமணி!

21. மண லால் ஒரு வீடு

தேடிவந்த தெய்வம் என்று சொல்லுவது உண்டல்லவா?-தெய்வம் தேடிவருமோ என்னவோ? ஆனல், வீரமணி அன்னத்தைத் தேடி வந்தான்.

வீரமணியை உச்சிப் பொழுதில், தன் இல்லத் தில் அன்னம் எதிர்ப்பார்க்கவில்லைதான். என்ரு லும், பழி சுமத்திய பவளக் கொடியைப் பழிக்கு ஆளாக்கப்பட்டுள்ள ஆசை மச்சான் வீரமணியின் முனனிலையில் நிறுத்தி நீதி விசாரணை நடத்திவிட வேண்டுமென்ற உள்நோக்கத் துடிப்போடுதான்