பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

282

ஆத்தா சந்நிதானத்தில் ஊர்ப் பஞ்சாயம் கூட்டப் போவதாகப் பாவலா காட்டி, அவளைக் கையைப் பிடித்து இழுத்தாள் அன்னம்.

வீரமணி வெள்ளைக்காளையும் கையுமாக அப்போது அங்கே காட்சியளித்தான்!

வீரமணியைக் கண்டதும், அவனைத் தேடிவந்த தெய்வமெனவே மதித்தாள் அன்னம். அடித்தா லும், அணைத்தாலும் சேய்க்குத் தாய்தான் சதம்.

வீரமணியைக் கண்டவுடன் தாயைக் கண்ட சேயாக மாறி விட்டாள் அன்னக்கொடி. உடனே மச்சான்!” என்று அலறிஞள், கதறினுள்!

வீரமணிக்குத் திக்கும் புரியவில்லை; திசையும் விளங்கவில்லை. அன்னம்! ஏன் அழுகிறே, அன்னம்? என்னத்தைப் பறிகொடுத்திட்டே? உன்ளுேட வெள்ளைக்காளையைத் தான் நான் உன் கிட்டே வாக்குக் கொடுத்ததுபோல கொண்டாந்து சேர்த்துப் புட்டேனே? என் அப்பாரோட வம்பை, விலை கொடுத்து வாங்கிலுைம் பாதகமில்லே; உன்னுேட அன்பை விலை கொடுக்காமல் வாங்கக் கடமைப்பட்டவன், உரிமைப்பட்டவன் அப் படின்னு தீர்மானம் பண்ணித்தான் மறுதக்கமும் கோதாவிலே இறங்கிப் புட்டானே?- இரங்க மாட்டியா நீ, அன்னம்?' என்று சிறுபிள்ளை மாதிரி செருமத் தொடங்கினுன் வீரமணி.

வெள்ளை கத்திக் கொண்டே அன்னத்திடம் ஒடிப் பாய்ந்து வந்து நின்றது. -