பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

罗&垒

நெகிழ்த்த வெட்கச் சிதறலோடு, 'நீ...நீ.பவளக் கொடி...சிலட்டுர்ப் பவளக்கொடிதானே?' என்று கேட்டான்.

இவளைத்தான் ஏதோ ஒரு பிரதிப் பிரயோசனம் கருதி, தன்னுடைய தலையில் அப்பா கட்டக் ங்ைகணம் கட்டியிருந்தார் என்கிற விவரத்தையும் அவன் மனச்சாட்சி உணர்ந்துதான் இருந்தது. ஆளுல், இவளே தான் இப்போது தன் மூச்சைப் பிரித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிருள் என்ற விஷயத்தை மட்டும் அவன் உணர்ந்திருக்க இயலாது!

ஆடு திருடிய கள்ளிக்குச் சமதையாக நின்ருள். பவளக்கொடி.பின்னர், என்னவோ முடிவுக்கு வந்த வளாக, "ஆமாம்! நான் பவளக்கெடிாதான்...!" என்று தலையைப் பலி ஆடு மாதிரி உலுக்கிக் குலுக்கினுள், வைரச்சிமிக்கிகளின் ஒளியில் மூக்குத்திக் கற்கள் முகம் கண்டன. மாரகச் சேலே இடம் பெயர்ந்த காரணத்தால், கழுத்து அட்டிகை இப்போது தான் தன்னைக் காட்டிக் கொள்ளவோ காட்டிக் கொடுக்கவோ வேளை பார்த்திருக்கலாம்.

'பவளம்! என்னைத் தெரியுதா, உனக்கு?’’ என்று வினவினன் வீரமணி. - 'உங்களை எப்படிங்க மறப்பேன் நான்? நெஞ்சிலே உள்ளதை நினைப்பிலே கொண்டாந்து, உள்ளதை உள்ளபடி சொல்றேனுங்க! நெஞ்சை ஒளிச்சு ஒரு வஞ்சகம் இருக்குங்களா?” -

வீரமணியின் மனப்பதற்றம் சூடு பிடித்தது.