பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285

285

பவளம் பழைய காட்டேரியாக உருக் கொண் டாள்! உடனே மச்சான்!” என்று வீரிட்டாள். குரல் தழுதழுத்தது. கறுப்புக் கண்கள் கன்றிச் சிவந்தன. சிவப்பில் ஒரு சாகசம் சிவப்பு விளக்குக் காட்டுகிறதே?...

அன்னக்கொடிக்குச் சுருக்கென்றது.

வீரமணி உந்திக்கமலத்தில் உதை பட்டமாதிரி பதைத்தான்; 'மச்சாளு? எங்கே உன் மச்சான்? யாரு உன் மச்சான்?’ என்று ஆத்திரத்தோடு வினவினன்.

பவளக்கொடி விம்மத் தொடங்கினுள். நீங்க தான் என் மச்சான்! என்ளுேட மச்சான், நீங்களே தானுங்க!' என்று நறுக்குத் தெறித்தாற் போல முழக்கம் செய்தாள்.

'அடி பாவி!' - வீரமணிக்குக் கண் தெரியாத காட்டிலே கண்களைக் கட்டிவிட்ட மாதிரி இருந்தது, 'கண்ணுமூச்சி விளையாடுகிருளே இந்தச் சிறுக்கி?வீறுகொண்டான் வீரமணி. பவளம், என்ன கதை பண்ணுறே?’ என்று ஆவவேசத் தீ கொழுந்து விட்டெரிய, அவளை அண்டினன்.

அன்னம் முள்மேல் நிற்கிருள்!

'நானு கதை பண்ணுறேன்? நீங்கதான் நாம இரண்டு பேரும் மண்வீடுகட்டி விளையாடினது எல்லாத்தையும் மறந்துப்புட்டு, ஒண்ணுமே அறியாத பச்சைப்பிள்ளை கணக்கிலே என்னை என்னென்னமோ விசாரிக்கிறீங்க! அடிநாள்