பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

287

'பவளம்......!’

அன்னக்கொடி மட்டிலும் தான் இப்படி அலறிக் கதறினுளா?-வீரமணியும்தான்!

22 சவால் விடு தூது

வீரமணிக்கு அப்போது தான் சுயப்பிரக்கினை திரும்பியிருக்க வேண்டும்.அரும்பு மீசை துடித்தது, அவனது தோள்களைப் போல! தலைகுனிந்தவாறு எதையோ சாதிக்கத் திட்டம் தீட்டி, அத்திட்டத் திலே பாதிக்கிணறு தாண்டிவிட்ட எக்களிப்புடன் நின்றிருந்த பவளக்கெடியைத் தலையை நிமிர்த்தி நோக்கினன். 'அடி பாவி: கொலைக்கு அஞ்சாப்பழி காரி!” சொற்கள் உந்தியினின்றும் முட்டி மோதிக் கொண்டு வெளிக் கிளம்பின. எத்தகைய பயங்கரப் பழி பாவத்தைச் சுமத்தி விட்டாள்!

'ஏலே, பவளக்கொடி! அப்படியே அங்கேயே

வீரமணி விடுத்திட்ட ஆணையில் பிணை பாவிய காட்டம் அன்னத்தை அச்சம் அடையச் செய்தது சாதுமிரண்டால் காடு கொள்ளாது. மச்சானின் நியாயமான ஆத்திரம் பவளக்கொடியின் அநியாய, மானபழிக்கு என்ன பாடத்தை எப்படிக் கற்பிக்கப் போகிறதோ?

பவளக்கொடியோ எதையும் சமாளிக்கும். இதயம் பூண்டவளைப்போல வீ ர ம ணி யி ன்