பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

290

பிளந்து கொண்டே ஓடி விட்டாள் பவளக்கொடி: வீரமணி சிலையாக மலைத்துப் போய்விட்டான்!

'மச்சான்!” என்று விம்மி விளித்தாள் அன்னக் கொடி, விம்மல் வெடித்தது: கண்ணிர் பொடித்தது.

ஒரு காக்கை குருவியை இப்போது அங்கே காணுேம்!

அன்னக்கொடி மத்தியான்னச்சாப்பாட்டைச் முடித்தாள். கூறுகெட்ட செங்கமலம் என்ன ஆளுள்?-சற்று முன், பவளக்கொடி இங்கே புயல் காற்றுச் சூழலில் நிற்கையில் ஊரார் புடைசூழ வேடிக்கை பார்ப்பது போன்று நின்று கொண்டே யிருந்த பண்ணைக்காரன் பரமசிவம் திடுதிடுப் பென்று எங்கே மறைந்து தொலைந்தான்?

வெள்ளே செல்லப் பிள்ளையாகச் சிணுங்குகிறது. பவளக்கொடி கட்டுச்சோறு கட்டிக் கொண்டு சிலட்டுரிலிருந்து வந்து, வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு பறந்து விட்டாளே, பாவி! கொஞ்சப் பொழுதுக்கு முந்தி வீரமணியும் பவளமும் சண்டை யில் ஈடுபட்டிருந்த நிலவரத்தை பரமசிவம் மாத் திரம் கண்டிருந்தால் ஒன்றும் குடிமூழ்கிப் போக மாட்டாது. கூடமாட வேலப்பன், நாச்சி, பார்வதி, விசாலம், மனேன்மணி என்று யார் யாரோ இருந்தார்களே? உலேவாயை மூடினலும் ஊர்வாயை மூட வாய்க்காதே?- -

வாசல் தடத்தில் வாழைத் தார்களையும் கத்திரிக்காய்க், கூடைகளையும் சுமந்தவாறு,சந்தைப்