பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

28. பத்தினிப் பெண் வேணும்:

ஊர் நாட்டாண்மைப் பெரியவர் ஆதிமூலத் தேவரின் மைந்தன் வீரமணிக்குக் கையும் ஓடி வில்லை; காலும் ஒடவில்லை. ஆகவே, அவனும் எங்கேயும் ஓடாமல், தன்னுடைய சொந்த அறையே சொந்தமென்று எண்ணியும், நம்பியும் அங்கேயே பழியாய்க் கிடந்தான். பேய் இருட்டைப் பேய் விரட்டிய குழல் விளக்கின் அழகான ஒளி வெள்ளத் தில் பிரிந்து கிடந்த பாரதியையும் தாகூரையும் வர வழைத்துக் கொண்ட மனச்சாந்தியுடன் நேர்க்கி ஞன் அவன். தீஞ்சுவைக் கவிகளின் தீர்க்கதரிசனம் நிரம்பிய சிந்தனைகளிலே அவனுடைய சிந்தை ஆசை வட்டம் சுழன்றது; விவசாயப் படிப்பும்,அப் படிம் பிற்கான செய்முறைப் பயிற்சியுமாக அண்ணுமலைம் பல்கலைக் கழகத்திலும் இளங்கோமனையிலும் கழிந்த அந்தக் கனவுலக நாட்களே அவளுல் ஒருபோதும் மறக்கவே முடியாது!-அந்நாட்களிலே அவன் கொண்ட இலட்சியங்கள் எத்தனை?-கண்ட கனவு கள் எத்தனை?-நாளும் பொழுதும் களிப்பும் அமைதியுமாக விளங்கிச் சுதந்தர வானம்பாடி யாகப் பறந்தவன் அவன். பிரச்னைகளுக்கு அப்பாற். பட்டவன் ஆண்டவன் மாத்திரமல்ல; அவனும் தான்! -ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தான்: அப்படிப்பட்டவன், இப்போது சோதனை மாதிரி, எத்தனை எத்தனை பிரச்னைகளுக்குப் பதில் சொல்ல நேரிட்டிருக்கிறது! ஒ! வாழ்க்கை ஒரு விளையாட்டு

அல்ல! - வாழ்க்கையே ஒரு பிரச்சினைதான்!...