பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

2&

பிடியில் மூக்கணுங்கயிறு லாகவமாகச் - சுழலக் காத்திருந்தது. 'தம்பி, மணி என்ன சொல்லுது?' என்று வினவினர்.

‘மணி எட்டு நாற்பது!’ என்று தெரியப்படுத் தின்ை மைந்தன்.

"ஆத்தாடியோ!...சரி, சரி. ப த ன மா ய் ஏறிக்கப்பா!'

“ஆகட்டுங்க, அப்பா!' என்று கூறிய வீரமணி, கால் மிதிப் பலகையில் கால் பாவிய தருணத்தில், நியாயம் ஒன்று தோன்றியது.

'அப்பா, இளவரசுப் பட்டம் கணக்கிலே என்னை வண்டியிலே குந்த வச்சிட்டு, வயசான நீங்க பண்ணையாளாட்டம் வண்டியை ஒட்டறதை யாராச்சும் கண்டால் இளக்காரம் பேசமாட்டாங் களா? ஆகச்சே, நீங்க வந்து வண்டியிலே உட் காருங்க. நான் வண்டியை விரட்டுறேனுங்க; அது தானுங்க முறை,’ என்று இங்கிதம் பேசினன்.

| பெரியவர் அமர்க்களமாகச் சிரிக்கலானர். 'தம்பி, பாசத்தோட மகத்துவத்தைப் புரிஞ்சுக்கிட திராணி இல்லாத புறம்போக்குப் பயல் எவனவது எதையாவது புரளி பேசிக்கிட்டுப் போகட்டுமே?அதைப்பத்தி நம்பளுக்கு என்ன கவலை? என் மட்டுக்கு, நீ மெய்யாலுமே இளவரசுப் பட்டம் தான்! ரொம்பக் காலமாய் இந்தக் கிழவாடிக்கு ஒரு ஆசை உண்டு. ஆன, அது பேராசை இல்லை. நியாய மான ஆசை. அது என்ன தெரியுமா தம்பி? நீ உன்