பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301

30 f

மில்லாத என் கீதம் உன் அன்பைத் தொட்டு விட்டது!....நேத்திரங்கள் குளமாக, "தெய்வமே' என்று கண்ணிர் விம்மினன். முத்தங்கள் தமிழரசி, யின் விடைக் கடிதத்துக்கு விடை கொடுத்தனவோ? -தமிழரசி எங்கள் முதற் காதலை உணர்ந்து, நீ எத்தனை நாகரிகமாக எங்களை வாழ்த்தியிருக்கிருய்! ஆகா!.... $

அப்போது:

"மச்சான்!” . அன்னத்தின் அவசரக் குரல் கேட்டு, சிந்தனை விலிருந்து விழிப்புப் பெற்ருன் வீரமணி, முறைப் பெண்ணை வரவேற்ருன்.

'பாரதி பாட்டு ரொம்ப நல்லாய் இருந்திச் சுங்க!”

'பாரதி பாட்டு நல்லாய்த் தானே இருக்கும்?” "நான் உங்க பாட்டைச் சொல்லுறேன்!” 'ஓகோ பாரதி பாட்டை நான் கொஞ்ச முந்தி பாடினேனே, அதைச் சொல்றியா? அப்படீன்ன, நீ நேரத்திலேயே வந்திட்டியா?”

ஊம்!” என்று ஆமோதித்தாள் அன்னம். வெளிச்சத்தில் அவளுடைய விழிகள் பேசின; அப் பேச்சில் சோகம் மின்னுகிறதே?

'அந்தப் பொம்பளை செங்கமலம் கிடிைச்சாச் சாமா?" .*

‘அந்தப் பாவியைத்தான் உங்க அப்பாரும் சிலட்டுர்ப் பவளக் கொடியோட அப்பாவும் காடு