பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303

●●●

அன்புக்காகக் கொடுத்திட்டாருங்களே!' என்று. நெஞ்சம் பிழியக் கூறினுள் அன்னம். -

“மகாத்மா...' வீரமணியின் உள்ளம் செருமத். தொடங்கியது.

இரத்தம் மாதிரி, இருட்டு உறைந்திருந்தது. "மச்சான்,' என்ருள் அன்னம். தன்னுணர்வு பெற்ருன் வீரமணி. "ம்... சொல்லு, அன்னம்,' என்ருன்.

அவள் என்னவோ சொல்லத் துடித்தாள்: ஆனால், தயங்கிள்ை; மருட்சி மீதுார நின்ருள். அப்புறம், 'காரியம் தலைக்கு மேலே போயிடும்போல் இருக்குங்களே, மச்சான்?’ என்று தெரியப் படுத்தினுள்.

'பவளக்கொடி சமாசசாரத்தைத் தானே சொல்லுறே?-ஆமா, ஆமா,’ என்ருன் அவன். நெற்றியைத் தடவிக் கொண்டான். நரம்புகள் புடைத்திருந்தன. "நம்ம ரெண்டு பேரையும் ஊர் நாட்டுக்கு மத்தியிலே ரெண்டு கேள்விக்குறியாக்கிப் புட்டு, பழிகாரி பவளம் ரெண்டு கேள்விக்குறிக்கும் ஊடாலே ஒரு ஆச்சரியக் குறியாக நிற்கிருள்!... பவளக் கொடி விதைச்ச வினையை பவளக் கொடியே அறுவடை செய்யாமல் விடப்போற. தில்லை நான். அதுக்கெல்லாம் வழி புரிஞ்சுக் கிட்டேனக்கும்! இந்த ஆவணத்தாங்கோட்டையும் அந்தச் சிலட்டுரும் கண்ணுக்குக் கண்ணுகக் கண்டு தெளியத்தானே போகுது, அன்னம்?’