பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

。费莎组

அன்னம் ஊம் கொட்டித் தலையாட்டிஞள்.

தோன்றிய ஆறுதல் புன்னகை மாறத் தொடங் கியது. உங்களை எனக்குத் தெரியாதா?-என்னை உங்களுக்குத் தெரியாதா...? இல்லை, நம்ப ரெண்டு பேரையும் பற்றி அக்கம் பக்கம் பதினறு ஊர் நாட்டுக்கும் தெரியாதா?...மச்சான்! நான் சொல்ல இங்கிட்டு வந்த விசயம் வேறே!' என்று மென்று விழுங்கினுள் ராமையாவின் பெண்.

என்னவோ சத்தம் கேட்டது. .

அன்னமும் வீரமணியும் ஏறிட்டு விழித்தனர்.

அங்கே:

பெரியவர் ஆதிமூலம் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்ருர். களத்துமேட்டில் சாவிக் கதிர்கள் பறப்பதை நினைவூட்டின, அவருடைய வெண் முடி கள். ஊர் நாட்டாண்மைக்காரர் முதற்பணியாக தமது அருமைத் திருமகனே முறைத்துப் பார்த்தார்; அடுத்த அலுவலாக, தம் மைத்துனன் மகளே வெறித்து நோக்கினர். அன்னக்கொடி, சமைஞ்ச பொண்ணுன நீ வேளை தப்பின இந்த வேளையிலே, இப்படி அசல் இடத்துக்கு வந்திருக்கிறது அசிங்கம் இல்லையா? கங்காணியார் மகள் பவளக்கொடி எங்க வீரமணி பேரிலே சுமத்தியிருக்கிற பழிச்சொல் இப்பத்தான் என் காதுக்கு எட்டிச்சு!...வந்த வழி யைப் பார்த்துக்கிட்டு நீ போ, அன்னம்! ...உங்க அப்பன் எங்க காணி, கரை, வீடு, வாசலை ஏலத்துக்கு விட்டுப்புட்டு, அவன் இந்த ஊரிலே குடியிருந்திட முடியுமாக்கும்?- விடியட்டும், விடியட்டும்!... உன்