பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29

ளுேட விவசாயப் பட்டப் படிப்பிலே பேர் சொல்லி, பேர் எடுக்கிற மாதிரி தேறினதும், உன்னை வண்டி யிலே குந்தவச்சு, நானே வண்டியை ஒட்ட வேணும் என்கிறதுதான் அந்த ஆசையாக்கும்!... அதைத் தொட்டுத்தான், பண்ணைக்காரனைக்கூட அனுப் பல்லே!’ என்று உருக்கமாகப் பேசி முடித்தார் ஆதிமூலம்.

வீரமணி உருகிக் கரைந்தான்: 'ட்ரியோ...!"

+

ஆவணத்தாங் கோட்டைச் சாலையில் ஒடிக் கொண்டிருந்த கூட்டுவண்டி, கீழ்த்திசையில் பாதை குறித்து நின்ற பூவைமாநகர் வழி' என்னும் அறிவிப்புக் கல்லைத் தொட்டு நின்றது.

பாரதி திடலில் எல்லை சொல்லி, எல்லே காட்டி, கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

ஆதிமூலத்தேவர் அடிமடியிலே செருகி வைத் திருந்த மஞ்சள் கடுதாசிப் புகையிலைப் பொட்ட ணத்தை விசையோடு எடுத்துப் பிரித்து, ஒரு கொத்து அள்ளி வாயில் போட்டுக் கடைவாயில் அடக்கிக் கொண்டார். சுரத்து சுரந்திருக்கும். முகத் தில் அடித்த கதிர்வீச்சைச் சட்டைபண்ணுமல் சட்டையை இழுத்துவிட்டவராக, மூக்களுங்கயிற் றைச் சுண்டி இழுத்தார். மேற்குத் திக்கில் மேலக் குடியிருப்பு’க்கு வழி காட்டிய வண்டித் தடத்தில் மடங்க எத்தனம் செய்து, செவலையைத் தட்டி, அதட்டி மடக்கினர்.

அச்சமயத்திலே: