பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

莓母

"அப்பா!...ஐயோ, அப்பா!'

வீரமணியின் அன்பெனும் பிடியில் தலைசாய்ந் தார் ஆதிமூலம். - - -

"அப்பா!' விம்மிஞன், வெடித்தான் வீரமணி. கருப்பையாவும் நடராசனும் கொணர்ந்து தந்த விசிறியையும் மகேஸ்வரி தந்த செம்பையும் வாங்கினன். தந்தையின் முகத்தில் நீரைத் தெளித் தான் ஒரு கையில்ை மார்பைத் தடவிக்கொடுத்துக் கொண்டே, இன்ஞெரு கையினல் விசிறிஞன்.

அட்சயப் பாத்திரமாகப் பொழிந்த-பொலிந்த வெய்யலின் குடை நிழலிலே நடந்து கொண்டே யிருந்த தர்மபுத்தத்திற்குச் சவால் விடுவது போலே தமுக்குச் சத்தம் அண்டி வந்தது. -

கச்சேரிச் சேவகன் புடை சூழ, அங்கே வாசலில் தோன்றினர், சிங்கப்பூர் சீமான் ராமையாத் தேவர்.

ஆடிப்பட்டத்தில் துரவப்பட்ட விதைநெல் பருவமும் பருவமழையும் பெற்றது. நாற்றுக் கண் திறப்பது உண்டு. அந்தப்பாவனையில் ஊர்த்தலைக் கட்டுப் பெரியவர் ஆதிமூலத்தேவர் கண்களைத் திறக்கலானர்: 'தம்பி வீரமணி! ஆதியிலே நான் போட்டு வச்சிருந்த அயனை திட்டப்படிக்கு நீ சிலட்டுர்க் கங்காணி மகள் பவளக்கொடியைக் கண்ணுலம் கட்டிக்கிட நல்ல வாக்குக் கொடுத்திருந் தால், சிலட்டுர்க் கங்காணியைக் கொண்டு, நான் உன் அம்மான் பாவி ராமையாவுக்குக் கொடுக்க