பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

311

3 # É

முகத்தை வெகு கம்பீரமான மிடுக்குட்ன் உயர்த் தினுன் "அம்மான்!” என்று கோபாவேசத்தொடு அலட்டினன்; அடிமடியைத் தடவிப் பார்த்துக் கொண்டான். சத்தியம் சுடர் தெறிக்கக் காட்சி யளிக்கும் பாரத வீரனைப் போன்று-அகம் கண்டு புறம் கண்ட தமிழ் வீரனைப்போன்று காட்சியளித் தான் அவன்.

ராமையாத்தேவர் கலக்கம் மிஞ்ச, நிமிர்ந் தார். அவருடைய எக்காளச் சிரிப்பு இப்போது போன இடம் தெரியக் காணுேம் - 'மாமா, வார்த்தையை எண்ணிப் பேசுங்க, ஆமா!'

உங்க அப்பன் என்கிட்டே பட்டிருக்கிற கடன் ருபாய் இருபதாயிரத்தை வட்டி முதல் தொகை யோடே ஐசாபைசா'வாக எண்ணி வச்சிட்டால், நான் வார்த்தையை எண்ணிப் பேச மாட்டேன. மாப்பிள்ளே?’’ -

'மாப்பிள்ளையும் ஆச்சு, மண்ணுங்கட்டியும் ஆச்சு மாப்பிள்ளை முறையெல்லாம், முறைகெட்ட உமக்கு ஒரு கேடாக்கும்?’’

ஒகோ! அம்புட்டு ரோசம் பொத்துக்கிட்டு வந்தாக்க, இப்பவே இந்த மினிட்டிலேயே என் கடனை அப்பனும் மகனும் எண்ணி வச்சுப்பிடுறது தானே? இல்லாட்டி, ஒங்க வீடுவாசல், காணிகரை சகலத்தையும் கச்சேரி அமிைைவக் கொண்டு இப்பவே சட்டப்படி ஜப்தி பண்ணி ஏலம் விட்டு ப் புடுவேன்!” என்று ராமையா கொக்கரித்தார்.