பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315

3 i 5

அன்னம் என் தெய்வமே!’ விண்முட்டி மண் முட்ட அலறிஞன் வீரமணி. -

பிரளயத்தில் சிக்கித் தவித்து, ஜீவமரணம் போராட்டம் நடத்தி, பின்னர், உயிர் தப்பிப் பிழைத்த நாணயமான அமைதியோடும் நேர்மை யான ஆனந்தத்தோடும் வீரமணி தன்னுடைய மனையின் மண்ணை அந்தக் கும்மிருட்டில் மிதித்த போது, ரத்த ஒட்டம் வேலை நிறுத்தம் செய்து விட்ட மாதிரி, அரைக் கணம் உணர்ந்தான்.தவிப்பு துடித்தது. -

அப்பா இருமிக் கொண்டிருந்தார்.

'அப்பா,' என்று விளித்தான் வீரமணி. 'தஞ்சாவூர்க் காரியம் முடிஞ்சாச்சு, கோர்ட்டிலே அம்மான் கடனைக் கட்டியாச்சுங்க,' என்று விவரம் சொன்னன். முகமும் கண்களும் ஒளி காட்டின. ஒளி கூட்டின! &

'தம்பி, வீரமணி!' என்ருர் ஆதிமூலத்தேவர். நெஞ்சைப் பிசைந்து கொண்டார். 'பணம் காசோட அருமை பெருமையை என்னைக் காட்டி லும் நீ ரொம்பக் கச்சிதமாகப் புரிஞ்சுக்கிட்டு, மரபு காத்து வந்த நம்மோட குல கவுரவத்தையும் குடும்ப மானத்தையும் கட்டிக் காத்துக் காட்டிப் புட்டே' என்று உணர்ச்சி வசப்பட்டும் மனம் நெகிழ்ந்தும் பேசினர். என்னவோ ரகசியம் கேட்கவோ, அல்லது ரகசியம் சொல்லவோ எண்ணி, யிருக்க வேண்டும்,