பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

岛夏翁

'பாசம் பூவிலங்காகச் சுமக்க, 'அப்பா! புறப் படுங்க நம்ம சொந்த மண்ணுக்கு' என்று வீரமணி வேண்டினுன்!

? 'இதுதானே நமக்குப் பூர்வீகமான சொந்த மண், தம்பி?’ என்று உயிரும் உள்ளமும் நடுங்கி ஒடுங்கக் கேட்டார் ஆதிமூலம்.

வீரமணி தொண்டை கம்மப் பேசலானன்: 'இது இப்ப ஆண்டுமாறிப் போயிடுச்சுங்க, கை மாறிப் போயிடுச்சுங்க, அப்பா! நம் மளுக்கு இந்த மட்டும் சொந்தமாக இருந்த நம்மோட வீடு வாசல், காடுகரை, நிலம் நீச்சு எல்லாம் இனி லேவாதேவி நல்லதம்பிச் செட்டியாருக்குச் சொந்தம்! அந்தப் புண்ணியவானே மட்டும் ஆத்தா எனக்கு இனம் காட்டாமல் இருந்திருந்தால், காலம்பறவே நம்ப குடும்பத்தோட மானமும் நம்ப ரெண்டு பேரோட உயிரும் பறிபோயிருக்குங்களே, அப்பா! தெய்வம்னு ஒண்ணு கட்டுச்சோறு கட்டிக்கிட்டுத் தனியே வந்து நமக்கு முன்னே குதிக்குமா, என்ன? நல்லதம்பி அண்ணுச்சிக்கு நான் ரொம்ப ரொம்ப நன்றிக் கடன் பட்டவளுக்கும்' நன்றியறிவு அவன்பேச்சில் ஏலமாக மணத்தது.

நாட்டாண்மைத் தலைவர் ஆதிமூலம், இருதயத் தைப் பற்றிக்கொண்டு குமுறிக் குமுறி அழுதார். கேவிக் கேவி அழுதார் !...

அப்பா!, கண் கெடுறதுக்கு முந்தியே சூரியனைக் கும்பிடுறதுதான் விவேகம் அழாதீங்க. அழுறதுக்காக வாழ்க்கை இல்லே!-சிரிக்கிறதுக்