பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317

3 H 7

காகத்தான் வாழ்க்கை:- ஆண்டவன் நமக்குக் கொடுத்த உயிருக்கு நாம் ஒரு அர்த்தம் கொடுக்க வேணும். இந்த நியதியையும் நீதியையும் மறந்துப் புட்டு, என்னையும் மறந்துப்புட்டு, நீங்க விஷப் பொடியைத் தின்னு ரகசியமாகச் சாகத் திட்டம் போட்ட உங்களை ஆத்தா, பாதிச் சாமத்திலே எனக்குக் காட்டிக் கொடுத்துப்புட்டா!-நல்ல காலம், விஷப் பொடியை மாற்றி, அதுக்குப் பதிலாகக் காய்ச்சல் பொடியை வச்சுப்புட்டு, நலி யாமல் நழுவி விட்டேன்! எதிர்வெயில் அடிக்காமல் இருக்கங்களா? எதிர் நீச்சல் போடாமல் தப்பிக்க முடியுங்களா, அப்பா?’’

நிதானமாகப் பேசி நிறுத்தின்ை பட்டதாரி

'மகனே!' என்று வீரிட்டார் ஆறுகரைத் தேவர்.

"அப்பா, என்னுேட சொந்தச் சேமிப்புப் பணத்தைக் கொண்டு, மகமாயி திடலுக்குக் கிழக் காலே காணிநிலம் கிரயம் பண்ணி, அங்கிட்டு ராத் திரியோடு ராத்திரியாய் ஒரு குடிசையும் போட்டிருக் கேன். அந்தக் குடிசைதான் இனி நமக்கு வீடுவாசல் மாடி மாளிகை எல்லாம்!-மனம் கொண்டது மாளிகை ஆச்சுங்களே? மனம் வச்சுப் பாடுபட்டால், குடிசையையே மாளிகையாகவும் ஆக்கிப்புட முடி யாதுங்களா, அப்பா?”

'நூத்திலே ஒரு சேதிடா, தம்பி!'