பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

品罗貌

தடைகளையும் தாண்டி, எல்லாச் சோதிப்புகளையும் கெலிச்சு, ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தராக தம்மை நாமே எடுத்துக்கிட்டிருக்கோமாக்கும்:

‘மெய்தானுங்க . மச்சான்! அஞ்சு வயசிலே, அறியாப் பருவத்திலே நீங்களும் நானும் மணல் வீடு கட்டி, புருசன் பெண்டாட்டி விளையாட்டு’ விளையாடினுேம். இப்ப அன்பு வீடு கட்டிக் கணவனும் மனைவியுமாக ஆகியிருக்கோம்! ... நான் உங்க மூலம் தாலி பாக்கியம் பெறவேணும் என்கிறது ஆத்தா முடிவு; அதேைலதான், என்ன யும் செத்துப் பிழைக்க வச்சுப்புட்டா, நான் செத்துப் போயிடுவேனேன்னு பயந்த நீங்களும் செத்துப் போயிடத் துடிச்சுருக்கீங்க. உங்களையும் காப்பாற்றிப்புட்டா ஆத்தா!'

அன்னம்! உழைத்து வாழ்பவனே வணங்கத் தக்கவன் என்று பேரறிஞரும், உழைப்பே தமிழனின் சரித்திரம் என்று கலைஞரும், உழைப்பே உயர்வளிக்கும்னு மக்கள் திலகமும், உழைப்பே உலகம்னு காமராசரும், பெரியாரும் சொல்லி, அயிருக்காங்க இல்லையா? அந்த அமுத வாக்குகளைக் கும்பிட்டு, நாமும் நம்மோட உழைப்பை வணங்கி உழைக்கக் கடமைப்பட்டிருக்கோம்!-நம்மோட காணி நிலத்திலே இனி நாம் நெற்றி வேர்வை நிலத் தில் விழ பாடுபட்டுப் பிழைப்போம். அப்பாலே மண்ணிலே பொன் விளையக் கேட்கவா வேணும்? நாட்டிலேயும் பசுமைப் புரட்சி மேலும் பூத்துக்

குலுங்காதா, அம்மான் மகளே!' • ‘. .