பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321

32.1

"மெய்தானுங்க, அத்தான்.' புதிய வைரச் சிமிக்கிகள் பளிச்சிட்டன : பொன்மணித் தீபம் புன்னகை செய்கிறது. இளங்கதிர்கள் கண்ணுமூச்சி ஆடுகின்றன. அந்நேரத்திலே: "மகனே, வீரமணி!' என்று ஒடி வந்தார் ஊர் நாட்டாண்மைக்காரர் ஆதிமூலத்தேவர். கட்டுக் குடுமியில் புதிய ஒளி பளிச்சிட்டது.

'மகளே, அன்னம்!’ என்று தேடி வந்தார். சிங்கப்பூர்ச் சீமான் ராமையாத் தேவர். அவரது முகத்தில் புதிய சிரிப்பு நிழலாடியது.

புது மணத் தம்பதி, புதிய மனத் தந்தைமா ரிடம் ஆசி பெற்றனர்!

அடுத்த இமைப்பினிவே: அங்கே அழகான கூண்டு வண்டியும் பாய்ந்து வந்தது: நின்றது:

'மச்சான்!' என்று அலறிப் புடைத்த வண்ணம், தட்டுத் தடுமாறியவாறு ஓடிவந்தாள் சிலட்டுர்க் கங்காணியாரின் செல்வத் திருமகள் பவளக்கொடி. புதுமணப்பெண்ணுகக் காட்சியளித் தாள் அவள். வீரமணியின் காலடியிலே நெடுஞ் சாண்கிடையாகச் சரண் அடைந்தாள் அவள், மல்லிகைப் பூக்கள் சிதறின. திலகம் சிலிர்த்தது:

மணமகன் வீரமணி திகைத்தான்!...