பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

எப்பவும் பயப்பட வேண்டிய தேவையே கிடையாதுங்க!... மாட்டைத் தட்டுங்க, நாம வீட்டுக்குப் போகலாம்!” என்று சன்னமான குரலெடுத்துக் கெஞ்சினான் அவன்.

இருதயத் தொகுதியை அழுத்தியவாறு, தலை நிமிர்ந்த முதியவரின் சோகம் மிகுந்த விழிகள் ஏனே கலங்கித் தடுமாறின!

சலங்கைகள் கொஞ்சின; கெஞ்சின:

ஒற்றை வேப்பமரம்.

அது, ஆதிமூலத்தேவரின் முப்பாட்டன் சொத்து.

திட்டிவாசல் நிழலில் கூண்டு வண்டி நின்றது.

முதலில் இறங்கியவன் வீரமணிதான்!-தன்னைக் கையேந்தி அன்பேந்தி வரவேற்று,வண்ணம்காட்டிவண்ணம் கூட்டிப் பளிச்சிட்டு விளங்கிய மச்சு வீட்டைப் பாசத்தின் ஏக்கத்தோடும் அன்பின் தவிப்போடும் ஏறிட்டு நோக்கினன் அவன். நெஞ்சின் அலைகள் சங்கம் முழக்கின. வேதனையும் வெய்துயிர்ப்பும் மேலிட்டன. திரும்பிப் பார்த். தான். .

வேப்பங்காற்று தாலாட்டுப் பாடும்.

வீரமணின் அழகான விழிகள் அழகாகச் சொக்கின.