பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36



இந்தினர். அன்புப் புதல்வனே ஆதரவுடன் நெருங்கி, அவனுடைய கண்ணிரைத் துடைத்தார். "வீரமணி. ேேதவி உன் ஆத்தா ரூபத்திலே நம்ப வீட்டுக்கு தேடிவந்தா. மகராசி வள்ளியம்மை மஞ்சளும் மருக்கொழுந்துமாய் இருந்த வீட்டிலே பணமும் காசும் பொன்னும் மணியும் குமிஞ்சிக் கிடந்திச்சு. நம்மோட கண்டுமுதல் களத்திலே பொன்னி நெல் அம்பாரம் அம்பாரமாய்க் குமிஞ்சி கிடக்குமே அந்தக் கதையே தான்! மகாலட்சுமி பூவும் பொட்டு மாய்ப் போனுள்; எல்லாமே போயிடுச்சே! ஐயை யோ, தெய்வமே!” -தொடர்ந்த பேச்சைத் தொடர வாய்க்காமல், தொண்டை அடைத்தது. மூச்சும் அடைத்தது. நிலை குலேந்து திக்கு முக்காடிர்ை!

வீரமணி தண்ணிர் கொடுத்தான்.

காசி, தடவிக் கொடுத்தார். - திண்ணைக் கடிகாரம் பத்து என்று அறிவிப்புக் கொடுத்தது. .

பெரியவர் தப்பினர்.

'தம்பி, அப்பாவைக் கூட்டிக்கினு வாங்க. தோசை ஆறிடப் போகுது. உங்களுக்குப் பிடிச்ச பச்சைக் கொத்தமல்லித் துகையல் அரைச்சிருக் கேன். பொறிச்ச விளைமீன் குழம்பும் உங்களுக்காக எடுத்து வச்சிருக்கேன். நான் போய் முட்டைத் தோசைக்கு மாவு ஊத்துறேன்,' என்று சொல்லிக் கிளம்பினர் காசி. சமையல் காசி அவர்.