பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37



பச்சைக் கொத்தமல்லி மணக்கிறது!

வீரமணி செய்வகை புரியாமல் மலைத்தான். தன் ருசி உணர்ந்து பச்சைக் கொத்தமல்லித் துகை யல் தயாரித்து வைத்திருப்பதாக விளம்பிய காசி யின் அன்பு அவனை அம்மான்மகள் அன்னக்கொடி யிடம் இட்டுச் சென்றிருக்குமோ?-உண்மைதான். இந்தப் பச்சைக் கொத்தமல்லித் துகையலை முதன் முதலில் பழக்கப் படுத்தி வைத்தவளே அன்னக் கொடிதான்! துகையலும் கையுமாக துவளும் மூர லும் துவளாத அன்புமாகத் தரிசனம் கொடுத்து, இனம் புரிந்த நேசத்தையும் இனம் புரியாத பாசத் தையும் காட்டி, ‘அத்தான், அத்தான்!” என்று சுற்றிப் படரும் கொடியாகச் சுற்றிச் சுற்றி வந்து, தானும் சுற்றி, தன்னையும் சுற்றிக் கொண்டு ஆடிப் பாடித் திரிந்த அம்மான் மகள் அன்னக்கொடியை அவன் நினைத்து மகிழாத வேளை உண்டா? ஏங்கித் தவிக்காத தருணம்தான் உண்டா?

காலத்தின் செப்பிடு வித்தைக்கு ஈடில்லை; எடுப்பில்லை.

நடந்த மகமாயி தேரோட்டத் திருநாளன் றைக்கு அயித்தை மகனே!...அத்தான்காரரே!' என்று கொஞ்சிக் கொஞ்சி ஓடோடி வந்தாள் அன்னம். ஆடவந்த பொற்பாவையாக ஆடிவந் தாள். சொக்கட்டான் சேலையின் முந்தானையில் முடிந்து வைத்திருந்த கொத்தமல்லித்தளைத் துகையலை வ ளே கு லு ங் க ச் சமர்ப்பித்தாள்; மருதாணி நகங்களில் சிந்துாரம் படர்ந்தது.

கா. நி. -3