பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

玺罗

தாம்? கண்ணுக்குத் தெரியாத ஆண்டவன் கண்ணுக்குத் தெரிந்த நல்ல மனிதர்களுக்காக இரங்கி வந்து-இறங்கி வந்து-சுமை தாங்கியாக வும் இருப்பாளுமே!’-இக் கூற்று மெய் தானே? அவனது உணர்வுகள் சிலிர்த்தன; சுழித்தன. "ஆத்தா!'-இதயத்தின் இதயம் ஒலமிட்டது. ஆத்தாள் வள்ளியம்மை மட்டுமல்லாமல், ஆத்தாள் மகமாயியும் நிழலாடினர். அவன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, பெரியவரை உற்றுப் பர்ர்த்தான்.

ஆதிமூலத் தேவர் இருந்திருந்தாற் போன்று. செருமத் தொடங்கினர்.

வீரமணி தடுமாறினன்.

தலைமாட்டில் அமர்ந்து வீசிக் கொண்டிருந்த காசி நகர்ந்தார்.

'அப்பா, பச்சைப் பாலகளுட்டம் ஏன் இப்படிச் செருமிறீங்க? செருமாதீங்க அப்பா, செருமாதீங்க!...என் நெஞ்சு பொறுக்காதுங்க; பொறுக்கவே பொறுக்காதுங்க!' என்று வேண்டி ஞன் தேவர் மைந்தன். கைப்பிடித் துணியை எடுத்து, அப்பாவின் முகத்தைத் துப்புரவு செய்ய எண்ணித் தாழ்வாரச் சுவரை உராய்ந்தபடி இடுப்பை நகர்த்தியபோது, சுவரின் காரை, நிலை பெயர்ந்து சிதறக் கண்டதும், அவன் அப்பால் நகரலானன். நனைந்த துணியை வீசிவிட்டு எழுந்