பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

4 3

தேவர் படுத்துக் கிடந்த மெத்தையை இழுத்து

நறுவிசான இடத்துக்கு மாற்றினர் பண்ணை யாட்கள்.

குதிர் குதிராகக் கோட்டை கட்டி வைக்கப் பட்டிருந்த விதை நெல் காய்ந்தாக வேண்டும்நாளே! - -

'அப்பா, ஒரு தோசையாச்சும் கிள்ளிப் போட்டுக்கிடுங்க. மல்லித் துவையல் வாய்க்கு உணக் கையாய் இருக்கும். தோசை தின்னிட்டு, துளி காப்பித் தண்ணியை ஊத்திக்குங்க. அப்பத்தான் குடல் காயாமல் இருக்கும்,' என்ருன் வீரமணி.

செல்வக் குமரனே ஏற இறங்க ஒரு பயணம் பார்த்தபின், விரக்தி ஊடாட, இதழ்களை விலக் கிஞர் பெரிய பண்ணே. 'என் நெஞ்சு காயுது: அப்பாலே குடல் காய்ஞ்சா மோசமாக்கும்? நீ சின்னஞ் சிறுசு. நீ தான் வயிற்றுக்கு வஞ்சனை பண்ணப்படாதப்பா! உன்னைப் பெற்றவளா இருக்கா, உனக்கு ஆக வேண்டியதைக் கவனிச்சுச் செய்ய?...' என்று நெடுமூச்செறிந்தார்,

காசி குறுக்குச் சாலிட்டுப் பாய்ந்து அப்படிச் சொல்லப்படாதுங்க, பெரியவுகளே! எங்க சின்ன ஐயாவைக் கவனிச்சுப் பணிவிடை செய்ய சீதேவி வரமட்டுக்கும், நான் கண்ணிலே விளக்கெண்ணெய் ஊற்றிக்கிட்டு எங்க வீரமணித் தம்பியைப் பார்த்துக்கிட மாட்டேனுங்களா? இந்த நாள் பரியந்தம் பார்த்துக்கிட்டு வரலேங்களா?' என்று கிலேசம் பிசிறு தட்டக் குறிப்பிட்டார்.