பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45

அது வெகு சுதந்திரத்தோடு கூவியது. அது துயில் கலையும் நேரம் பார்த்துப் பொழுது விடியும் நாட்டிலே அவதரிக்க வேண்டியதோ, என்னவோ?

எச்சில் துப்பிக் காயும் நேரம் வரை, பெரியவர் சூன்யத்தைச் சூறையாடினர். பிறகு ஏதோவொரு வைராக்கியம் கொண்டவராக எழுந்தமர்ந்தார். 'தம்பி, வினப் புரிஞ்சதுக்குப்புறம், மகன் பேச்சை அப்பன் சரின்னு தெரிஞ்சுக்கிட்டுத் தட்டி நடக் கிறது ஞாயம் இல்லே. நாம ரெண்டுபேரும் இங்கிட் டாலே குந்திகிட்டே தோசை தின்னப் போருேம்,' என்று வாஞ்சை துலங்கத் தெரிவித்தார்.

நல்ல மூச்சோடு காசி அகன்ருர்,

தஞ்சாவூரில் வாங்கி வந்து வெட்டி வைத் திருந்த ஆப்பிள் துண்டங்களிலே ஒன்றை எடுத்து நீட்டினன் வீரமணி. மணி பன்னிரண்டு அடித்ததும், குழாய் மாத்திரைகளைக் கொடுக்க வேண்டும்!

கடன் பட்ட நெஞ்சின் தத்தளிப்புடன் மகனிட மிருந்து பழத் துண்டைக் கையேந்தினர் தேவர். 'மகனே, இந்தா, இதிலே கொஞ்சம் நீ கடிச்சுக்க,’’ என்று நீட்டினர்.

பிள்ளையின் அன்பைத் தந்தை தட்ட முடியாத போது, தந்தையின் பாசத்தைத் தனயன் மட்டும் தட்ட முடியுமா?

கடன் பட்ட அதே தவிப்போடு, அப்பா நீட்டிய பழத்துண்டில் ஒரு பகுதியைக் கடித்துக் கொள்ள வேண்டியவன் ஆளுன் அவன். இப்போது அவன்