பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணின் புதிய கதை இது



 'மண்ணை நம்பி மரம் இருக்கு, ஐலேசா!’ என்று

எங்கள் பட்டிக்காட்டுப் பக்கத்தில் ஒர் ஏற்றப்பாட்டு பாடப் படுவது உண்டு. ஏற்றம் மிகுந்த இப்பாட்டு எங்களுடைய மண்ணுக்கு மட்டுமே சொந்தம் என்பதல்லதான!-நம்முடைய பொது மண்ணுக்கே அது சொந்தம்!

 இந்நிலையிலே:
 மண்ணை நம்பி மரம் இருக்கின்றதோ, இல்லையோ?மண்ணை நம்பி இந்தப் பாரதத் திருநாடு இருக்கின்றது: அதனால்தானே என்னவோ, கிராமங்கள்தாம் நமது இந்திய நாட்டின் ஜீவநாடி என்பதாக அன்றே அண்ணல் காந்தி அடிகள் தீர்க்க தரிசனத்துடன் வலியுறுத்திச் சொல்லிவிட் டார்கள். அந்த நல்வாக்கின் நற்பலனுகவே, மத்திய-மாநில அரசுகளின் கவனம் கிராமங்களின் பால் வெகுவாக நிலைத்து விட்டிருக்கிறது!
 காணிநிலம் அமரகவி பாரதிக்கு மாத்திரம் சொந்த மாக அமையவில்லை; அந்த நற்கனவு வீரமணிக்கும் ஒர் இலட்சியமாக அமைகிறது. இலட்சியம் என்றாலே, அக்கினிப் பரீட்சைகளுக்கும் அக்கினிப்பிரவேசங்களுக்கும் பஞ்சம் இருக்க முடியுமா?-இருக்கலாமா? பட்டிக்காட்டில் பிறந்த யதார்த்தவாதியான இவ்விளைஞன் ஒரு தனிபிறப்பு: ஏன் தெரியுமா?-அவன் தன்னை மட்டும் நேசிக்கவில்லை; தன் மனச் சாட்சியையும் நேசிக்கிறான்! அத்துடன் நின்றிருதால் தேவலாமே? அவன் தன்னுடைய மனத்தின் சாட்சியாகத் தனது அம்மான் மகளான அன்னக் கொடியை-பொற்பின் செல்வி யாம் அன்னக்கொடியை நேசிக்கிறான்; உயிரும் உயிர்ப்பு மாகவே நேசிக்கிறான்! கதை-அவன்கதை மேலும் பல சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக ஆகிறது: ஆக்கப்படுகிறது!
 தமிழச்சாதிக்கு அகமும் புறமும் புதிதல்லவே!
 உதாரணம்: வீரமணி-அன்னக்கொடி ஜோடி!

உத்தாரணம் தருவதோ, அவர்களது ஜோடிக் காதலின் ஜோடி சேர்த்த-ஜோடி சேர்ந்த கதை: