பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48

திட்டேனே? அப்புறம் உனக்கென்ன கவலையாம்? எதையும் தாங்குற இதயம் வேணும்னு அடிக்கொரு தரம் நீ சொல்லமாட்டியா? சரி, சரி. ஒரே ஞாபகமாய்த் தோசையைத் தின்னப்பா, தம்பி!'

ஆகட்டுங்க!”

தோசையைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண் டார் தேவர். என்னவோ விகடத்தை நினைத்துக் கொண்ட நிலையில், தமக்குத் தாமே சுமுகமாகச் சிரித்துக் கொண்டார் அவர். பிறகு, மகனை விளித் தார். ஒரு சங்கதியை மறந்திட்டியே?’ என்று விடுகதை போட்டார்.

தஞ்சாவூர் விவகாரம் பற்றிய விவரம் கேட் கிரு.ரா அப்பா? "எந்தச் சங்கதிங்க?' என்று கேள்விக்கு எதிர்க் கேள்வி போட்டான்.

'நீ உன் ஆத்தா வள்ளியம்மை பெற்ற மகன் !'

"ஆமாங்கப்பா அட்டி ஏது?’’

"நாம ரெண்டு பேரும் கொஞ்ச முந்தி தோசை சாப்பிடுறதுக்காகப் போட்டுக்கிட்ட அன்புச் சண்டையிலே, நீங்க பெற்ற மகன் நான் அப்படின்னு என்கிட்டே ஒரு பேச்சுச் சொன்னே. அதுக்கோசரம்தான் ஞாபகப்படுத்தினேன்,' என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசினர்.

அவனுக்கும் சிரிப்பைக் கட்டுப்படுத்தக்கூட முடியவில்லை. 'எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்த பாடம் தானுங்க. காலையிலே கோயிலடியிலே நான்