பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

5 :

பதில் சொன்னன். இது சம்பந்தமான கதை, சுாரணம் எல்லாம்தான் பெரியவருக்கு வெளிச்ச மாகத் தெரியுமே?

'உன் அம்மான் மகள் அன்னக்கொடிதான் ஆதியிலே உனக்கு இந்தத் துகையலைப் பழக்கம் செஞ்சு வச்சுது. மெய்தானே, தம்பி?’’

'நீங்க பொய் சொல்ல மாட்டிங்களே, அப்பா!'

“அது சரி; கொஞ்ச நேரத்திற்கு முன்னுடி இந்தத் துகையலை எடுத்து எடுத்து நாக்கிலே போட்டுப் பார்த்தியே அந்தச் சமயத்திலே, உனக்கு உன்னுேட அம்மான் மகள் அன்னக்கொடியோட ஞாபகம் ஒடோடி வந்திருக்கும், இல்லையாப்பா?”

நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகமா?

‘மெய்தானுங்க!”

தன் குடும்பமும் தன் தாய் மாமன் குடும்பமும் கற்பிளவாகப் பிளந்து,காடுமேடாகப் பிரிந்து விட்ட இரண்டுங் கெட்ட இந்நேரத்திலே, அப்பா என் னென்னவோ குறுக்கு விசாரணை யெல்லாம் நடத்து கிருரே? வீரமணிக்குக் கிழக்கும்புரியவில்லை; மேற்கும் புரியவில்லை.

“அதுவும் சரிதான். உன் முறைப் பெண் அன்னக் கொடியைப் பத்தி நீ என்ன நினைக்கிறே தம்பி?’’