பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

莎&

வீரமணிக்கா விடைகொடுக்கத் தெரியாது?-- 'பாரதியாருடைய புதுமைப் பெண் நம்ப அன்னக் கொடி!...நம்ப அன்னக்கொடி, பாரதிதாசனு டைய புரட்சித் தமிழச்சி! ஆமாங்க, அப்பா!'

'ஒ!...அப்படியா?”

தேவர் வாயைப் பிளந்தார். கேட்காததைக் கேட்ட மாதிரி ஆச்சரியப்பட்டிருக்கலாம். காணுத தைக் கண்ட பாவனையில் அதிசயப்பட்டிருக்கலாம்! பொட்டுப் பொழுது என்னவோ ஆலோசனை செப் தார். சலனமும் சாந்தியும் இழை பின்னின. விழித் திரை வீசி, மகனைத் துழாவினர்; ஏதோ சொல்ல அல்லது, கேட்க வாயெடுத்தார் அவர்.

அதற்குள்:

முட்டைத் தோசையின் வாசனை இணை சேர்ந்து வந்து விட்டது.

குறிப்பறிந்த தேவர், 'நம்ப காசியும் பெரிய கைகாரன் தான். அப்பனுக்கும் பிள்ளைக்கும் ஊடாலே வம்பு தும்பு மறுதரமும் மூண்டிடம் பிடாதேன்னு, ஆளுக்கொரு முட்டைத்தோசை யாய்ச் சுட்டுப்போட்டுக் கொண்டாந்திட்டானே, கண்டியாப்பா, வீரமணி' என்று குறிப்புணர்த்தித் துருவினர்.

ஊம்!”

காசி ஆளுக்கொன்ருகப் போடும் வரை கம்’ மென்றிருந்தார் தேவர். பிறகு, தன் பங்குக்குக்