பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

53

கிடைத்த முட்டைத் தோசையையும் தன் மைந் தனின் தட்டிலேயே போட்டார். 'எனக்குத்தான் மேலுக்கு முடியலையே? இந்த லட்சணத்தில், முட்டைத் தோசையை வாயைக் கட்டாமல் தின்னுப்பிட்டா, அப்புறம் வயிற்றிலே மப்பு வந்துப் புடா தா?... அளவறிஞ்சு உண்ணவேணும்னு சும்மாவா பாடிவைச்சிருக்காங்க மூத்தவங்க:தம்பி, நீ சும்மா சாப்பிடு. துள்ளித்திரிகிற வயசு: கல்லைத் தின்னலும் செரிச்சிடுமாக்கும்! ஆன ஒரு சின்னச் சரத்து! தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை என்கிற பாட்டை அசை போட்டுக் கிட்டே, நீ பாட்டுக்குக் கல்லேத் தின்னுவச்சு என்னைச் சோதிக்க மட்டும் துணிஞ்சுடாதே!...” என்று எச்சரித்தார். பிறகு ஆவணி, ஒழுங்கை வாசலிலே வந்துக்கிட்டி ருக்குது, கண்ணுலம் காட்சிக்குத் தலை கொடுக்க வேண்டிய தங்கம் நீ! வேண்டிய மட்டும் சாப்பிடு!” என்று முத்தாய்ப்பு வைத்தார் ஆதிமூலம்.

வெட்கம் பற்களைக்காட்ட, மறு பேச்சாடாமல் முட்டைத் தோசையில் சுவை பதித்தான் வீரமணி.

காது செவிடுபட, வாசல் வெளியில் பறந்தது லாரி ஒன்று.

பெரியவகளுக்கில்ல...உங்க மச்சான் ராமை யாத்தேவர்தான் லாரியிலே கிழக்கே பறந்துக்கிட்டி ருக்காங்க. ஆவணி பிறந்தடியுமே, அவர் கட்டிக் கிட்டிருக்கிற புது மாடி வீட்டுக்கு மேளதாளத் தேட குடி புகுந்திடுவாராம்,' என்று விவரித்தார் காசி. . . . . . . . .

கா.நி-4