பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55

வீரமணிக்கு நல்ல மூச்சு வந்தது. மென்னகை,

யும் வந்தது. 'ஆகட்டுங்க, அப்பா!' என்ருன்; புத்துயிர் பெற்றிருப்பான்! எச்சில் கையை வீசிக் கொண்டே நடந்தான். வேகாத வெய்யில்

வேகாதா, என்ன?-நிலைப்படியை அடைந்தான் அவன்,

அங்கே: ஒற்றைக்கால் தவம் செய்த வண்ணம், அழகே உயிராகவும் உயிரே அழகாகவும் பொலிந்து, பாச மும் நேசமும் சிறந்து நின்று கொண்டே யிருந்தாள் அன்னக்கொடி! -

4. ஆடி வந்த பொற்பாவை

ஆடி வந்த பொற்பாவையாக-தேடி வந்த பூந்தென்றலாக-பாடி வந்த பூஞ்சிட்டாகத் தோன்றினுள் அன்னக்கொடி!

அவளையே வைத்தகண்வாங்காமல் பார்த்தான் வீரமணி; பார்த்துக் கொண்டேயிருந்தான். கண்ணுக்குக் கண்ணுகக் காணும் இக்காட்சி சொப்பனம் அல்லவே?-சுந்தரக் கனவிலே சுந்தரி, அன்னக்கொடியைக் கண்டு ரசித்து, பின்னர் கனவு கலந்ததும், அன்னத்தைக் காணுமல் ஏங்கிப் புழுங் கித் தவித்த நாட்கள் அவன் வரை எத்தனையோ இருந்தது உண்டு. ஆனல், இப்போது அவன் கனக் காணவில்லை. ஆனலும், அவனுடைய கனவுக் கிளி பொற்கனவாகிக் கண் சிமிட்டிக் கொண்டேயிருக்